சாதிகள் உருவான வரலாறு | தமிழ் குடிகள் உருவான வரலாறு பகுதி 1
இந்த காணொளியில் சாதிகள் உருவான உண்மை வரலாறு மற்றும் தமிழ் குடிகள் ஒரே மூலத்திலிருந்து எப்படி உருவானது என்பதை ஆதாரங்களுடன் விரிவாக விளக்கியிருக்கிறேன். சாதி என்பது பிறப்பால் வந்ததா, அல்லது மனிதர்களின் தொழில், அரசியல் மற்றும் அதிகார ஆசைகளால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பா? என்பதற்கான தெளிவான பதிலை இந்த பகுதி வழங்குகிறது.
Arul Pandiyarasan
3/26/20191 min read
சாதிகள் உருவான வரலாறு | தமிழ் குடிகள் உருவான வரலாறு பகுதி 1 | தமிழ் தக்கார்

இந்தியாவில் சாதிகளின் எண்ணிக்கை:
👉 இந்தியாவில் எத்தனை சாதிகள் உள்ளன, ஏன் மாநிலங்களுக்கு மாநிலம் சாதி எண்ணிக்கை மாறுகிறது, உபசாதிகள் (Sub-Castes) உருவானது எப்படி
காதல் கலப்பு திருமணம்:
👉 இன்று காதல் திருமணத்தை ஆதரிக்கும் இளைஞர்கள் கூட, சமூக அழுத்தங்களால் எப்படி சாதி அரசியலின் வலையில் சிக்குகிறார்கள் என்பதையும் இந்த காணொளி கேள்வியாக முன்வைக்கிறது.
தமிழ் குடிகள் உருவான வரலாறு:
👉 இனக்கலப்பு எப்படி உருவாகிறது; பாண்டியர், சேரர், சோழர் ஆகியோர் எந்தச் சாதியையும் சார்ந்தவர்கள் அல்ல; அவர்கள் ஒரே தமிழ் குடியின் அரசியல் மற்றும் நிர்வாக அடையாளங்கள் மட்டுமே என்பதையும், சங்க காலத்தில் வேறு குடியில் திருமணம், பண்பாடு, தமிழ் சங்கம் போன்றவற்றில் ஒற்றுமையாக இருந்ததை தெளிவாக விளக்கியிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் சாதி அமைப்பு:
👉பழந்தமிழர் வாழ்க்கையில் இன்று போல் சாதி அரசியல் இல்லை; அரசன் , விவசாயி, வணிகர், படைவீரர், அறிஞர் என தொழில் அடிப்படையிலான சமூக அமைப்பு மட்டுமே இருந்தது. 👉 13-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வெளிநாட்டு மற்றும் அயல் அரசர்களின் ஆட்சியால் தமிழ் குடிகள் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்ட வரலாறு, அதனால் உருவான இன்றைய சமூக சிக்கல்கள், போலி வரலாற்றுக் கதைகள் எப்படி தமிழர்களின் உண்மையான பெருமையை மறைத்தன என்பதையும் இந்த பகுதி வெளிப்படுத்துகிறது.
சாதி அரசியல்:
👉 சாதி உருவாக்கத்தில் தனி மனித எண்ணங்களும், சுயநலமான, பேராசை, பதவி ஆசை, தீய செயல்களும் கொண்ட மனிதர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
👉 சாதி அரசியலிலிருந்து தமிழ்நாடு வெளியே வர முடியும். உண்மையான வரலாறு, ஒற்றுமை, அன்பு நம்மிடமே இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொள்வதே வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான, விடுதலைக்கான முதல் படி.
இதையும் பார்க்க: FC BC SC ST MBC சாதி பிரிவுகள் உருவானது எப்படி?
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.