எல்லாவற்றையும் விட

உறவுகள், பிரிவுகள், துன்பங்கள், தோல்விகள் என வாழ்க்கை பல சோதனைகளை முன்வைத்தாலும், மனிதனை முன்னேற்றும் மிகப்பெரிய சக்தி தன்னம்பிக்கையே என்பதை இந்தக் கவிதை வலியுறுத்துகிறது. வீழ்ச்சிகளை முடிவாக அல்ல, வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றும் மனவலிமையே உண்மையான சாதனையின் அடித்தளம் என்பதைக் கூறுகிறது.

Arul Pandiyarasan

3/18/2005

பிரிவுகள் சில
அவற்றைவிட
உறவுகள் ஏராளம்

சொந்தங்கள் உண்டு
அதனால்
கவலைகளும் உண்டு

கண்ணீர் கண்ட நாட்கள் உண்டு
மனம் நொறுங்கிய
இரவுகளும் உண்டு

துன்பங்கள் தேடி வரும்
தோல்விகள் சில
தொடர்ந்து வரும்

சோர்வைச் சுமந்தாலும்
சோதனையைத் தாண்டுவேன்

பகைவர்களும் உண்டு
தளராத
இலட்சியங்களும் உண்டு

அனைத்தையும் விட
ஒன்று பெரிது —
தன்னம்பிக்கை

அதனால்தான்
ஒவ்வொரு தோல்வியையும்
வெற்றிக்கான படிக்கல்லாக்குகிறேன்.

தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.