காத்திருப்பின் மொழி

காத்திருப்பு என்பது காலத்தை வீணாக்கும் செயலல்ல; நம்பிக்கையை உயிரோடு வைத்திருக்கும் ஒரு அமைதியான பயணம். இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வும் பொறுமையின் அர்த்தத்தை உணர்த்துவது போல, மனித வாழ்விலும் நம்பிக்கையும் உழைப்பும் காத்திருப்பை வெற்றியாக மாற்றுகின்றன. அன்பின் வருகைக்காக ஏங்கும் ஒரு இதயத்தின் அமைதியான மொழியை இந்தக் கவிதை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது.

Arul Pandiyarasan

3/4/2005

கடல் அலை வருமென
கரை காத்திருக்கிறது

வளர்பிறை முழுமையுறுமென
பௌர்ணமி காத்திருக்கிறது

சூரியன் உதிக்குமென
வைகறை காத்திருக்கிறது

விடுதலை வருமென
ஜோசியக் கிளி காத்திருக்கிறது

நாளை மலருமென
நம்பிக்கை காத்திருக்கிறது

வெற்றி கனியுமென
கடின உழைப்பு காத்திருக்கிறது

தோழியே... நீ வருவாயென
என் இமைகள் காத்திருக்கின்றன.

தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.