கனவுகளின் எல்லை
கனவுகள் கலைந்தாலும் மனம் கலைந்து விடக்கூடாது என்பதையே இந்தக் கவிதை உணர்த்துகிறது. தோல்வி, எதிர்ப்பு, வேதனை அனைத்தையும் தாண்டி நம்பிக்கையுடன் முன்னேறுவதே உண்மையான வெற்றி என்பதை வலியுறுத்துகிறது. வானத்தைத் தொடும் உயர்ந்த இலக்கை நோக்கி இடைவிடாமல் பயணிக்கும் மன உறுதியின் குரலே இந்தக் கவிதை.
அருள் பாண்டியராசன்
5/22/2005
கனவுகள் கலைந்தாலும்
மீண்டும் காண்கிறேன்
கைவிடப்பட்டாலும்
கலங்கி நிற்பதில்லை
தோல்வியுற்றாலும்
மீண்டும் எழுகிறேன்
நம்பினோர் எதிர்த்தாலும்
நம்பிக்கை குறைவதில்லை
அழுகையை அடக்கி
மனதை காயப்படுத்தவில்லை
தோல்வியே முடிவென்று
ஒருநாளும் நினைப்பதில்லை
சோர்ந்து நின்றுவிட
என் மனம் பழகவில்லை
வானம் தொடுவதே
என் கனவுகளின் எல்லை
சிந்தனைகள் சிதறினாலும்
வாழ்க்கை சிதறுவதில்லை
வெற்றி பெறாமல்
என் பயணம் முடிவதில்லை
இந்த கனவுகள் இல்லாமல்
நான் இல்லை
அதை நனவாக்குவதே
எந்தன் வாழ்வின் எல்லை


| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.