தன்னையறிதல்

தன்னையறிதல் என்பது மனித வாழ்வின் மிகப்பெரிய வெற்றியைப் பற்றிப் பேசும் ஒரு சிந்தனைக்கவிதை. ஒரு உண்மையான வெற்றி என்பது மனிதன் தன்னையே முழுமையாக அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது என்பதை ஆழமான தத்துவப் பார்வையுடன் உணர்த்துகிறது. வாழ்க்கை, வெற்றி, தோல்வி, அனுபவம் மற்றும் சுயதேடல் குறித்து சிந்திக்க வைக்கும் தமிழ் கவிதை.

Arul Pandiyarasan

2/3/2005

மண்ணை துளைத்தால்
விதையின் வெற்றி

சிந்தனைகள் உரசினால்
கவிதையின் வெற்றி

மழைத்துளி மண்ணைச் சேர்ந்தால்
காற்றின் வெற்றி

ஒற்றுமையே
இந்தியாவின் வெற்றி

கற்பனைக்கு உயிரூட்டல்
மனிதனின் வெற்றி

மனிதனின் இறப்பு
பிறப்பின் வெற்றி

சந்தித்த தோல்விகள்
அனுபவத்தின் வெற்றி

ஆனால் எனக்கு ஏது வெற்றி?
தன்னையறியும் வரை...

தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.