உன் உணர்வில் நான்

காதல் என்பது கண்களால் காண்பதல்ல; இதயத்தில் பதியும் உணர்வால் உலகமே புதிதாய் மலர்வதே அதன் உண்மையான அழகு. ஒரு மனிதரின் வருகை, வறண்ட மனதிற்கே துளிர் கொடுத்து, சாதாரண தருணங்களைக் கூட வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளாக மாற்றுகிறது. "உன் உணர்வில் நான்" என்பது, காதல் ஒருவரின் உள்ளத்தையும் உலகப் பார்வையையும் எவ்வாறு முழுமையாக மாற்றுகிறது என்பதை மென்மையாகச் சொல்லும் உணர்வுப்பூர்வமான கவிதை.

அருள் பாண்டியராசன்

5/7/2005

காண முடியாத காற்றை
தொட்டது போல

மேக இறக்கைகளை

விரித்து பறக்கிறேன்

புதிய மொழியைக்
கற்றது போல

சிறு மைனாக்களை

கொஞ்சுகிறேன்

நீ கருமை நிறமாய் இருந்தும்
வைரமாய் மின்னுகிறாய்

என் உலகம் முழுதும்
உன்னைச் சுற்றியே சுழல்கிறது

பட்டுப்போன மரம் நான்

துளிர்ப்பது போல

மகிழ்ச்சி மழையில்

நனைகிறேன்

வாழ்வில் எல்லாம்
சாதித்தது போல

உன்னை தேவதையாய்

காண்கிறேன்

உன்னோடு பல யுகங்கள்

வாழ்ந்தது போல

நம் நினைவுச் சுழலில்

தவிக்கிறேன்

எல்லாம் கனவா?

இல்லை இல்லை

என் இதயத்தில்

நீ பதித்த உணர்வு...

தொடர்புடைய கவிதைகள்: உருவமாய் நீ... உயிராய் நான்...

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.