NEP 2020: 3 மொழி கொள்கை | கேள்விக் குறியாகும் தமிழ் எதிர்காலம்
New Education Policy 2020 (NEP 2020) – இந்திய கல்வி வரலாற்றில் மூன்றாவது பெரிய கல்விக் கொள்கை. ஆனால் இந்த கொள்கை மாணவர்களுக்கு முன்னேற்றமா? அல்லது மொழி–அரசியல் திணிப்பா? இந்த காணொளியில், NEP 2020-ஐ மொழி, அரசியல், கல்வி, சமூக நீதி என்ற கோணங்களில் ஆழமாக பகுப்பாய்வு செய்து விளக்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
8/3/20201 min read
NEP 2020: 3 மொழி கொள்கை | கேள்விக் குறியாகும் தமிழ் எதிர்காலம்

🔹 3 மொழி கொள்கை – நடைமுறை சிக்கல்:
ஒரு மாநிலத்தில் 3 மொழிகளை கற்றல் என்பது குழந்தைகளுக்கு எவ்வளவு சுமையாக இருக்கும்? ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை இந்திய ஒன்றியம் கட்டாயமாக திணிப்பது, இந்திய அரசியலமைப்பின் (Federal Structure) ஆவிக்கே எதிரானது என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறேன்.
🔹 இந்தியாவின் கல்விக் கொள்கை வரலாறு:
• சுதந்திரத்திற்கு பிறகு வந்த முதல் & இரண்டாவது NEP
• தற்போது நடைமுறையில் உள்ள மூன்றாவது NEP 2020
• Kasturi Rangan தலைமையிலான குழுவின் பங்கு மற்றும் பரிந்துரைகள்
🔹 தமிழ் நாடு கல்வி முறை – ஒரு மாறுபட்ட பாதை:
• தமிழ் நாடு எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்த மாநிலம். 2 மொழி கொள்கை (தமிழ் + ஆங்கிலம்) தமிழ்நாட்டுக்கு போதுமானது என்பதற்கான கல்வி, அறிவியல், சமூக காரணங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
🔹 NEP 2020 – நன்மைகள் & பாதகங்கள்:
✔️ பள்ளி & கல்லூரி பாடத்திட்டத்தில் வரும் மாற்றங்கள்
✔️ ஆசிரியர்களுக்கான Welfare & Professional Development
❌ Public Examination எண்ணிக்கை அதிகரிப்பு
❌ 10ஆம் வகுப்பு வரை Dropout Rate அதிகரிக்கும் அபாயம்
🔹 மொழி அரசியல் & தமிழ் எதிர்காலம்:
NEP 2020 வழியாக ஹிந்தி – சமஸ்கிருத வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அது தமிழ் மொழியின் எதிர்காலம், இருப்பு, பயன்பாடு மீது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதையும் இந்த காணொளி கேள்வியாக முன்வைக்கிறது. மேலும், கல்வித்துறை மீது இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாடு அதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கம் என்ற அம்சங்களும் ஆதாரங்களுடன் விவாதிக்கப்படுகின்றன. NEP 2020 – கல்வி மாற்றமா? அல்லது மொழி–அரசியல் திட்டமா? இந்த காணொளி உங்களை சிந்திக்க வைக்கும்.
இதையும் பார்க்க: சோழர் ஆட்சி இருண்ட காலமா? | பா ரஞ்சித் சர்ச்சை பேச்சு
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.