என் ஆசான்
இந்தக் கவிதை, இயற்கையே மனிதனின் தலைசிறந்த ஆசான் என்பதை ஆழமாக உணர்த்துகிறது. எறும்பிலிருந்து சிங்கம் வரை ஒவ்வொரு உயிரினமும் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஒரு உயர்ந்த பண்பை நமக்குக் கற்பிக்கிறது. ஆசையை அடக்கி, நற்சிந்தனையுடன் விடாமுயற்சியை இணைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இந்தக் கவிதை வலியுறுத்துகிறது.
Arul Pandiyarasan
2/10/2007
எழுந்திரு இளைஞனே!
இன்னும் தூக்கமா? இல்லை துயரமா?
மாய உலகின் மின்னலழகில்
மயங்கி விழுந்து கிடக்காதே
துன்பமும் தோல்வியும் கண்டு
துவண்டு நின்றுவிடாதே
எல்லாம் கற்றுக்கொள்
இயற்கையிடமிருந்து!
சுறுசுறுப்பு எறும்பிடம்
தன்னம்பிக்கை சிலந்தியிடம்
நற்பண்பு புறாக்களிடம்
திறமை தூக்கணாங்குருவியிடம்
பொறுமை கொக்கிடம்
தந்திரம் நரியிடம்
துல்லியம் புலியிடம்
தைரியம் சிங்கத்திடம்
தயங்கி விடாதே
முடியாது என்று நினைக்காதே
முயன்றால் முடியாதது
எதுவுமில்லை இவ்வுலகில்!
ஐயோ! எவ்வளவு பணம்!
என்ன அழகு! உயர்ந்த பதவி!
இவையெல்லாம் அல்ல
அவற்றின் மீதான பற்றுதல்தான்
உன்னைப் பிணைக்கும் சிறைக்கம்பிகள்
ஆசையே உன் சிறைச்சாலை
நற்சிந்தனையே
ஆசையை எரிக்கும் தீப்பிழம்பு
சிறிது சிந்தனை செய்
அதிகம் செயல்படு
எல்லாம் கற்றுக்கொள்
இயற்கையிடமிருந்து.
குறிக்கோள் உறுதியாக இருந்தால்,
வெற்றி
உன் காலடியில் காத்திருக்கும்.
தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?


| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.