உன் அன்பால்
இந்தக் கவிதை, உண்மையான அன்பு ஒரு மனிதனின் வாழ்க்கையையும் மனதையும் எவ்வாறு முழுமையாக மாற்றுகிறது என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது. தாயன்பை இழந்த மனம், ஒருவரின் அரவணைப்பில் பாசத்தையும் தன்னம்பிக்கையையும் மீண்டும் கண்டடையும் பயணமே இதன் மையக் கருத்து. அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல; அது ஒரு மனிதனை புதிதாய் பிறக்க வைக்கும் மிகப் பெரிய சக்தி என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது.
Arul Pandiyarasan
12/27/2007
அன்பு எது என்று
நான் உணர்ந்ததென்றால்
அது உன்னால் மட்டுமே...
பாசம் என்பதன் பொருளை
உன்னிடம் பழகிய
பிறகே அறிந்தேன்
காதல் என்றால்
கண்ணாமூச்சி விளையாட்டு
என்றிருந்தேன்
என் எண்ணங்களை
மாற்றி எழுதிய
அன்புத் தீயே...
உண்மை காதலை
உந்தன் கண்ணில்
கண்டேனடி...
என் வாழ்க்கை
பூஞ்சோலையில்
முட்களை மட்டும் களைந்து சென்றாய்
தாயின் அன்பை
காணாத நான்...
உன் அரவணைப்பில் உணர்ந்தேனடி
ஊற்றுநீராய்
இருந்த என்னை
உலகுக்கு அறிமுகப்படுத்தினாய்
என்னை பண்படுத்திய
பெருமை
உனக்கும் உண்டு
என் உலகமே குடும்பம் மட்டும்தான்
என்றிருந்த நான்
உன் அன்பில் கரைந்துபோனேன்
உன் அன்பு
என்னை புதிதாய்
பிறக்க வைக்கிறது
ஆற்று நீராய்
இருந்த என்னை
காட்டாற்று வெள்ளமாக்கினாய்
அன்பு எத்தனை பெரியது
எவ்வளவு வலிமை கொண்டது
உன்னிடம்தான் உணர்ந்தேன்
எல்லோரின் அன்பும் கிடைத்திருந்தாலும்
உன் அன்பு மட்டும்
தனித்துவமாய் தெரிகிறது
இந்த அன்பு
என் உயிர் இருக்கும் வரை
தொடர்ந்தால்
என் தன்னம்பிக்கைக்கு
என்றும் வலிமை தரும்.
தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?


| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.