உருவமாய் நீ... உயிராய் நான்...

இந்தக் கவிதை, இரு உயிர்களின் பிரிக்க முடியாத பிணைப்பை இதயத்தைத் தொடும் உவமைகளால் வெளிப்படுத்துகிறது. உருவமும் உயிரும் ஒன்றை ஒன்று முழுமையாக்குவது போல, உண்மையான காதல் ஒருவரின் இருப்பில் மற்றொருவரின் அர்த்தத்தை கண்டடைகிறது. பிரிவு உடலை மட்டுமல்ல, ஆன்மாவையும் வெறுமையாக்கும் என்ற ஆழமான காதல் உணர்வை இந்தக் கவிதை சுமக்கிறது.

Arul Pandiyarasan

9/2/2011

உன் இமைகளை மூடிவிடாதே
உலகத்தை காண முடியாது
கண்களாய் நான்...

சுவாசத்தை நிறுத்திவிடாதே
உடல் உயிரற்றுப் போய்விடும்
உயிராய் நான்...

மௌனத்தில் மூழ்கிவிடாதே
வார்த்தைகள் வழி தெரியாது தவிக்கும்
மொழியாய் நான்...

உண்மை என்னவென்றால்,
உருவமாய் நீ...
உயிராய் நான்...

உன் பேச்சு நின்றுவிட்டால்
என் மூச்சும் நின்றுவிடும்
என்னை நினைக்காமல் போனால்
என் பாதைகள் திசை மாறிவிடும்

இதயம் இல்லாமல் உயிரில்லை
உயிர் இல்லாமல் இதயமில்லை


இரண்டையும் பிரிக்க நினைத்தால்
இரண்டுமே வாழாதடி

இதயத்திற்குத்தான் தெரியும்
உயிரின் உண்மையான அருமை
ஒன்றுக்குள் ஒன்றாய் கலந்த நாமிருவர்
நீயில்லாமல் நானில்லை...
என்றென்றும் எனக்குள் நீ...

தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.