எப்பொழுது விழிப்பாய், தமிழா?
"எப்பொழுது விழிப்பாய், தமிழா?" என்ற இந்தக் கவிதை, மொழி, இன அடையாளம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து சிந்திக்க வைக்கும் வலிமையான கேள்வியை எழுப்புகிறது. சாதி, மதம், மொழி அரசியல் மற்றும் தமிழின் நிலையை வரலாற்றுப் பார்வையுடன் விமர்சனமாக அணுகி, தமிழரின் பொறுப்பையும் மொழிப்பற்றின் அவசியத்தையும் உணர்த்துகிறது. தன்னுணர்வு, மொழி மரியாதை மற்றும் சமூக விழிப்புணர்வை நோக்கி தமிழரை அழைக்கும் ஒரு சிந்தனைக்கவிதை.
Arul Pandiyarasan
7/28/2026
எப்பொழுது விழிப்பாய், தமிழா?
சாதி, மதம், மது என போதைகளின்
சங்கிலியில் பிணைந்திருக்கும் வரை
இந்தியாவில் நீ மூன்றாம் நிலைக் குடிமகனே!
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பிரசவித்த
மனோன்மணியம் சுந்தரனாரின் பெயர் தாங்கும்
பல்கலைக்கழக பட்டமளிப்பு மேடையில் கூட
தமிழுக்கு மூன்றாம் இடம் – என்ன கொடுமை!
சனாதனவாதிகளிடம் கற்றுக்கொள்
மொழிப்பற்றின் உறுதியை!
பழம்பெருமை பேசுவது மட்டும் போதாது;
மொழிக்காக நிற்கும் துணிவு உனக்குண்டா, தமிழா?
கனகச்சிதமான தொலைநோக்குடன்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழென்னும்
இந்திய பேரரசின் வேரை அரித்த
கரையானாய் மாறிய சமஸ்கிருதம்
அரசியல் அறியாமல் சாதி, மதம்,
"நான்" எனும் அகங்காரப் போதையில் மூழ்கி,
உன் அடையாளத்தை நீயே அடகு வைத்து
வேடிக்கை பார்க்கிறாய், தமிழா!
எப்பொழுதுவிழிப்பாய், தமிழா?
தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?


| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.