பறந்திட தடையென்ன?

பறந்திட தடையென்ன? என்பது பயம், தோல்வி, தடைகள் ஆகியவற்றை வென்று தன்னம்பிக்கையுடன் உயரங்களை அடைய மனிதனை ஊக்குவிக்கும் ஒரு ஊக்கக் கவிதை. உயர்ந்த குறிக்கோள், துணிவு, பணிவு, நல்ல சிந்தனை ஆகியவையே வெற்றியின் உண்மையான சிறகுகள் என்பதை இக்கவிதை வலியுறுத்துகிறது. வாழ்க்கைப் போராட்டங்களை தைரியமாக எதிர்கொண்டு, மற்றவரையும் உயர்வாக எண்ணி, சாதனை நோக்கி பறக்கத் தூண்டும் நம்பிக்கையின் குரலாக இந்தக் கவிதை அமைகிறது.

Arul Pandiyarasan

7/12/2005

பறந்திட தடையென்ன இந்த பறவைக்கு

பார் போற்றும் செயல் செய்திடு

வெயில் மழை கண்டு நின்றுவிட்டால்
வெற்றி உன் வசம் வருவதில்லை

வாழ்வது கடினம் இந்த உலகினிலே
சாதிக்கவே நீ பிறந்தாய் புவிதனிலே

கொஞ்சமும் பயம் வேண்டாம்

உன் பலம் தைரியம்தான்

நீ பறந்திட பதறாத மனதை

பக்குவமாய் பெற்றிடு

உயர பறந்திட ஆசைப்படு

மற்றவரை உயர்வுடன் எண்ணிடு

மறக்காதே உயர்ந்த குறிக்கோளை

நீக்கிடு உன் எல்லா குறைகளை

நாடி நல்லதைத் தேடிடு

வெற்றியை உன் வசமாக்கிடு

துன்பம் இல்லாமல் உலகமில்லை

இன்பம் இல்லாமல் உன் வாழ்க்கை இல்லை

முடியும் என்ற தன்னம்பிக்கை

கொண்டு முன்னேறிடு

எதிர்வரும் தடைகளை தகர்த்திட்டு

தயங்காமல் முன்னே சென்றிடு

துணிந்து செய் துவளாமல் செய்

பணிந்து செய் பார் போற்றிட

சிறகை விரித்து பறந்திடு - இனி

பறந்திட தடையென்ன இந்த பறவைக்கு

தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.